Categories
அரசியல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

73 வயதில் ஊராட்சி மன்றத் தலைவரான மூதாட்டி!

கமுதி அருகே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட 73 வயது மூதாட்டி ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்று மக்களின் பாராட்டைப் பெற்றார்.

ராமநாதபுரம் மாவட்டத்தின் 11 ஒன்றியங்களில் உள்ள 3,691 உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இந்நிலையில், இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை ஏழு மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒரு சில பகுதிகளில் நாளை வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிக்கு 50 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 70 பேர் வரை வெற்றிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை மந்த நிலையில் நடைபெற்று வருவதாகக் கருத்து நிலவி வருகிறது.

இதனிடையே, ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றியத்திற்குட்பட்ட அ. தரைக்குடி ஊராட்சி மன்றத் தலைவராக கா. தங்கவேலு என்ற 73 வயது மூதாட்டி 60 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |