Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நீண்ட நேரமாக கதவை திறக்காத கணவன்…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் பகுதியில் ரவீந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஸ்ரீகுமாரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதனையடுத்து ரவீந்திரனும் அவரது மனைவியும் தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளனர். கடந்த மாதம் 27-ஆம் தேதி கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தனது அறைக்கு ரவீந்திரன் தூங்குவதற்காக சென்றுள்ளார்.

இதனையடுத்து நீண்ட நேரமாகியும் கதவை திறக்காததால் அவரது மனைவி சந்தேகமடைந்து அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரவீந்திரன் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரவீந்திரனின் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |