உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த முதியவர் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செம்மாம்பாடி கிராமத்தில் மண்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக மண்ணு உடல்நிலை குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் பலன் அளிக்காததால் விரக்தி அடைந்த மண்ணு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தை எடுத்து குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் மண்ணுவை உடனடியாக மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதன் பின் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் மண்ணு அனுமதிக்கப்பட்டார். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மண்ணு பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த சேத்துப்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.