விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நெடுங்குணம் கிராமத்தில் முனுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக முனுசாமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இனால் முனுசாமி பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று குணமாகததால் மன உளைச்சலுக்கு ஆளானார். இந்நிலையில் முனுசாமி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் முனுசாமியை உடனடியாக மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன் பின் மேல் சிகிச்சைக்காக முனுசாமியை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முனுசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சேத்துப்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.