Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வெளியூர் சென்ற முதியவர்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

முதியவர் வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள அக்ரகார தெருவில் நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேமா என்ற மனைவியும், வெங்கடேசன் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் பிரேமா சில வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்டார். அதன்பின் வெங்கடேசன் தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக தங்கி வேலை செய்வதால் நாகராஜன் மட்டும் தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இதனை அடுத்து நாகராஜன் வெளியூர் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்த போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் உள்ளே சென்று பார்த்ததில் பீரோவில் வைத்திருந்த ஒரு லட்ச ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 15 பவுன் தங்க நகை காணாமல் போயிருந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக நாகராஜன் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொள்ளை நடந்த வீட்டை சோதனை செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |