Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நண்பரை பார்க்க சென்ற முதியவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. ஈரோடு அருகே பரிதாபம்….!!

ஆற்றைக் கடக்க முயன்ற முதியவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் பகுதியில் ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வனஜா என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு சுஜய்பிரசாந்த், அனு பிரசாந்த் என்ற இரண்டு மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் ரவி ஆற்றின் மறு கரையில் இருக்கும் அவரது நண்பரை பார்க்க நீந்தி சென்றுள்ளார். இதனையடுத்து நண்பரை பார்த்துவிட்டு அவர் மீண்டும் ஆற்றின் வழியே மறுகரைக்கு திரும்பியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி ரவி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

இதன்பின் நீரின் சுழற்சி காரணமாக ரவியின் உடல் கரை ஒதுங்கியுள்ளது. இதனையடுத்து ஆற்றின் கரை பகுதிக்கு வந்த ரவியின் மகன் அனுபிரசாந்த் தந்தை இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதுள்ளார். இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ரவியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |