முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள பாசல் மாநிலத்தில் Muttenz பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் இருக்கும் ஒரு முதியோர் இல்லத்தில் 27 வயதானவர்கள், 14 பணியாளர்கள் என்று மொத்தம் 41 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இரண்டு வார காலத்திற்கு முதியோர் இல்லம் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அங்கிருபப்வர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இது எவ்வாறு அங்கு பரவியது என்பதை கண்டுபிடிக்க இயலவில்லை. இருப்பினும் சுகாதாரத்துறை முன்வைத்த அனைத்து கட்டுப்பாடுகளையும் அந்த முதியோர் இல்லத்தில் கடைப்பிடித்துள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது. அதிலும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.