Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பட்டப்பகலில்… துப்பாக்கி முனையில்… நடந்த துணிகர சம்பவம்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாகலூர் சாலையில் முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனம் ஒன்று அமைந்துள்ளது.  அங்கு இன்று காலை வழக்கம்போல் நிறுவன ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்கள் போல் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென்று அலுவலகத்திற்குள் நுழைந்து துப்பாக்கி முனையில் அங்கு பணியிலிருந்த  4 ஊழியர்களை கட்டிப்போட்டுள்ளனர்.

பின்னர் அவர்களிடமிருந்து சாவியை கைப்பற்றி அலுவலகத்தில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்புள்ள 25,091கிராம்  தங்க நகைகளையும் 90,000 ரூபாய் ரொக்கப் பணத்தையும் கொள்ளை அடித்துக் கொண்டு சென்றுள்ளனர். இந்த சம்பவத்திற்கு பிறகு சில ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்தபோது அங்கு சக ஊழியர்கள் கட்டிபோடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பின்னர் உடனடியாக அவர்களை விடுவித்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்து தடயங்களை சேகரித்து வருகின்றனர். துப்பாக்கி முனையில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |