முத்தரப்பு கூட்டணி விவகாரத்தால் ஐரோப்பிய யூனியன் ஆஸ்திரேலியா இடையே நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உலகின் பிரபல நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவின் முத்தரப்பு கூட்டணி (ஆக்கஸ்) விவகாரத்தில் பதற்றம் நீடித்துள்ளது. இது குறித்து BBC ஊடகம் கூறியதாவது, “அமெரிக்கா-பிரான்சு நாடுகளிடையே பதற்றங்கள் அதிகரித்துள்ளது. இதனால் ஐரோப்பிய யூனியன் உடனான பேச்சு வார்த்தையை ஆஸ்திரேலியா ஒத்திவைத்துள்ளது.
மேலும் கடந்த 2016 ஆம் ஆண்டு தங்கத்திற்கு நீர்மூழ்கிக் கப்பல்கள் வாங்கும், சுமார் ₹2.7 லட்சம் கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா ரத்து செய்ததால் பிரான்சு அரசு கண்டனம் தெரிவித்தது. இதனால் பிரான்சு அரசுக்கு ஆதரவு அளிப்பதாக ஐரோப்பிய யூனியன் கூறியது. இதனை தொடர்ந்து வரும் 12ஆம் தேதி நடைபெறவுள்ள ஐரோப்பிய யூனியன் உடனான வர்த்தக பேச்சுவார்த்தை நவம்பர் மாதம் நடக்கும் என ஆஸ்திரேலிய வர்த்தக துறை அமைச்சர் டேன் டெஹான் கூறினார். அதோடு இதற்கும் ஆக்கஸ் விவகாரத்திற்க்கும் எந்த தொடர்பும் இல்லை என்று டேன் டெஹான் கூறியுள்ளார்.
மேலும் ஆஸ்திரேலியாவுடன் கடந்த ஜூன் மாதம் நடந்த பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாக ஐரோப்பிய யூனியன் கூறியது. தற்போது 2 ஆவது கட்ட பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மூன்றாவது பெரிய வர்த்தகமாக கடந்த ஆண்டு 5.3 லட்சம் கோடி மதிப்பில் ஐரோப்பிய யூனியன் மற்றும் ஆஸ்திரேலியா இடையே வர்த்தகம் நடந்ததாகவும்” செய்தி வெளிவந்தது.