Categories
உலக செய்திகள்

‘யாருக்கும் தீங்கு விளைவிக்காது’…. ஆக்கஸ் கூட்டணிக்கு வலுக்கும் எதிர்ப்புகள்…. கருத்து வெளியிட்ட பாதுகாப்பு நிபுணர்….!!

முத்தரப்பு பாதுகாப்பு கூட்டாண்மைக்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் இணைந்து ‘ஆக்கஸ்’ என்னும் முத்தரப்பு பாதுகாப்பு கூட்டாண்மையை உருவாக்கியுள்ளனர். இந்த கூட்டாண்மையானது இந்தோ- பசிபிக் பகுதியில் சீனாவின் ஆதிக்ககம் மற்றும் அவர்களின் அதிகமான ராணுவ ஊடுருவலை தவிர்த்து அதனை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது என்று மூன்று நாடுகளும் தெரிவித்துள்ளன. மேலும் இந்த பாதுகாப்பு கூட்டாண்மை சீனா உட்பட எந்தவொரு உலக நாடுகளுக்கும் பாதிப்பை விளைவிக்காது என்றும் கூறியுள்ளனர். குறிப்பாக இந்த முத்தரப்பு பாதுகாப்பு கூட்டாண்மையானது உளவு தகவல்களை பரிமாறி கொள்ள, குவாண்டம் தொழில்நுட்ப வளர்ச்சியை பெருக்க, க்ரூஸ் ரக ஏவுகணைகளை வழங்க போன்ற பல்வேறு மேம்பாட்டு திட்டங்களை கொண்டுள்ளது.

அதிலும் ஆஸ்திரேலியாவிற்கு அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை வழங்குவதே இதன் முதன்மையான திட்டமாகும். அதாவது ஆஸ்திரேலியாவில் இருக்கும் அடிலெய்டில் நீர்மூழ்கி கப்பல்கள் கட்டுவதற்கான தொழில்நுட்பம் குறித்து அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துடன் ஆலோசனை நடத்தப்படவுள்ளது. இதுகுறித்து ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பாதுகாப்பு நிபுணரான  மைக்கேல் ஷூபிரிட்ஜ்  கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ஒரு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் என்பது பெரியளவிலான பாதுகாப்பு அம்சத்தை கொண்டது. ஆகவே இது பிராந்தியத்தின் நடுநிலை தன்மையில் பாதிப்பை விளைவிக்கும். மேலும் உலகின் ஆறு நாடுகள் மட்டுமே நீர்மூழ்கி கப்பல்களை கொண்டுள்ளன.

 

அவை அனைத்தும் அணு ஆயுதங்களற்ற மிகவும் பலம் பொருந்திய தடுப்பு அமைப்பாகும்” என்று கூறியுள்ளார். முக்கியமாக இந்த முத்தரப்பு பாதுகாப்பு கூட்டாண்மை சீனாவுக்கு எதிரானது அல்ல என்று கூறப்படுகிறது. இருப்பினும் இதனை சீனா ஏற்க மறுத்து கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால் இந்தோ- பசிபிக் பகுதியில் அமைதி மற்றும் நடுநிலை தன்மை பாதிப்படையும் என்றும் இது அனைவரிடமும் ஆயுதப் போட்டியை ஏற்படுத்தும் எனவும் சீனா வலியுறுத்தியுள்ளது. இந்த பாதுகாப்பு கூட்டாண்மையினால் சீனா மட்டுமின்றி அமெரிக்காவின் நட்பு நாடாகிய பிரான்சும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

 

இதே போல் 27 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய கூட்டமைப்பும் இந்த பாதுகாப்பு கூட்டாண்மைக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இதில் பிரான்ஸ் எதிர்ப்பு தெரிவிக்க இரண்டு காரணங்கள் தான். அதில் ஒன்று உலகளாவிய விவகாரங்களில் அமெரிக்காவிற்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் இது போன்று முக்கிய பிரச்சனையில் தங்களை வேற்றுமைப்படுத்தி காட்டி தனியாக செல்லும் அணுகுமுறை தவறானது என்று பிரான்ஸ் கூறுகிறது. இதனையடுத்து மற்றொரு முக்கிய காரணம், அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்களை முதன்முதலாக பிரான்ஸ்லிருந்து வாங்க ஆஸ்திரேலியா  ஒப்பந்தம் செய்தது. ஆனால் தற்போது அதனை ரத்து செய்துள்ளது.

இதுபோன்று முதுகில் குத்தும் நடவடிக்கையை ஆஸ்திரேலியா மேற்கொண்டது எங்களுக்கு மிகவும் மனவேதனை தருவதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா அதிபராக பொறுப்பேற்ற மூன்று மாதங்களுக்கு பிறகு ஐரோப்பா சென்ற ஜோ பைடன் முன்னாள் ஆட்சியில் முறிந்த உறவை சீர்ப்படுத்துவேன் என்றும் எங்கள் மீதான நம்பகத்தன்மையை மறுபடியும் வரவழைப்பேன் எனவும் கூறினார். ஆனால் தற்போதோ ஒரு புதிய திட்டத்தில் எங்களுடன் கலந்து ஆலோசிக்காமல் தனியாக முடிவெடுத்துள்ளார். இது முன்னாள் அமெரிக்கா அதிபரான ட்ரம்பின் கொள்கைகளை போல் உள்ளதாக ஐரோப்பா கருத்து தெரிவித்துள்ளது.

Categories

Tech |