முதுகு தண்டுவட பாதிப்பு நோயுடன் பிறந்த குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோவிந்த செட்டி பகுதியில் ஜெகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பிரியதர்ஷினி என்ற மனைவி உள்ளனர். இவர்களுக்கு 9 மாதத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் அந்த குழந்தை எஸ்.எம்.ஏ., எனப்படும் முதுகு தண்டுவட பாதிப்பு நோயால் பாதிக்கப்பட்டு இருந்துள்ளது.
இதனால் குழந்தையின் மருத்துவ செலவிற்காக 16 கோடி ரூபாய் தேவைப்பட்டதை அறிந்த தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உதவி வந்தனர். இதனை அடுத்து குழந்தைக்கு கடந்த 4 தினங்களுக்கு முன்பாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் குழந்தையை சேர்த்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.