தற்போது இளநிலை மற்றும் முதல் நிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகின்ற நிலையில் அடுத்த ஆண்டு முதல் முதுநிலை படிப்புகளுக்கு நீட் தேர்வு ரத்து செய்ய ப்படும் என்றும் அதற்கு பதிலாக நெக்ஸ்ட் தேர்வு நடத்தப்படும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றனர். இதுகுறித்து சமீபத்தில் தேசிய மருத்துவ கமிஷனரின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அதில், நெக்ஸ்ட் தேர்வு அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இது குறித்த விருப்பத்தை மத்திய அரசு சுகாதார அமைச்சகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே முதுநிலை மாணவர்களின் நீட் தேர்வு அடுத்த ஆண்டு உடன் முடிவுக்கு வரும். அதன் பிறகு 2024-25 ஆம் கல்வி ஆண்டில் நெக்ஸ்ட் தேர்வு அமுல்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நெக்ஸ்ட் தேர்வை தேசிய மருத்துவ கல்லூரி வாரியத்திற்கு பதிலாக எய்ம்ஸ் நிர்வாகம் நடத்தும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றனர். இருப்பினும் இது குறித்த இறுதி முடிவு இனிமேல் தான் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.