Categories
மாநில செய்திகள்

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு கவுன்சிலிங் தொடக்கம்… சென்டாக் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் சுகாதார அமைச்சகம் சார்பில் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான முதல் கட்ட கவுன்சில் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த முதுநிலை மருத்துவ படிப்பிற்கான முதல் கட்ட கவுன்சிலிங் இன்று முதல் நவம்பர் 2 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இடம் கிடைத்த மாணவர்கள் 2 ஆம் தேதிக்குள் சேர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட கவுன்சிலிங் 4 ஆம் தேதி 7ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

அதன்பிறகு  இடம் கிடைத்த மாணவர்கள் 7 ஆம் தேதிகள் சேர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதி கட்ட கவுன்சிலிங் 9 ஆம் தேதி தொடங்கி 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.மேலும் முதுநிலை மருத்துவம் மேற்படிப்புகளுக்கு கடந்த ஜூன் மாதமே விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதற்கான எம்.டி., எம்.எஸ். படிப்புகளுக்கு 1,537 பேரும், முதுநிலை மருத்துவ படிப்பிற்கு 111 பேரும் என 1,648 மருத்துவ மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

Categories

Tech |