Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. நம் கண்ணுக்கு தெரியாமல் நடக்கும் சைபர் குற்றங்கள்…. என்னென்ன தெரியுமா?… இத படிச்சு தெரிஞ்சுக்கோங்க….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று ஊரடங்கின்போது 55% சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தேசிய குற்றப்பதிவேடு அமைப்பு தெரிவித்துள்ளது. இவற்றில் பணம் திருட்டு, ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டுதல் ஆகியவை முதலிடத்தில் இருக்கிறது.

கொரோனா தொற்று ஊரடங்கின் போது அதிகமானோர் வீட்டிலிருந்து பணிபுரிந்தனர். மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்பட்டன. இவற்றின் காரணமாக தொழில் நுட்பங்கள் தெரியாதவர்கள் கூட அதைக் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இவையே சைபர் குற்றங்கள் அதிகரிப்பதற்கான காரணமாகிவிட்டது.

வங்கியிலிருந்து பேசுவதாக கூறி ஓடிபி எண் கேட்பது ஆகியவைதான் சைபர் கிரைம் என்று பலர் எண்ணிய நிலையில், கண்ணுக்குத் தெரியாத வகையில் சைபர்கிரைம் தினமும் நடந்து கொண்டிருக்கிறது என்று எச்சரிக்கிறார் மதுரை ஜியோமியோ இன்பர்மேட்டிக்ஸ் நிர்வாக இயக்குனர் தினேஷ்பாண்டியன்.

இதுபற்றி ஆய்வுகளை செய்து வரும் அவர் பேசியதாவது, சென்ற ஆண்டு சைபர் குற்றங்கள் அதிகம் நடந்த நகரங்களில் சென்னை முக்கிய பங்கு வகிக்கிறது. அதில் 18 வயதிற்குட்பட்டவர்கள் அதிகம் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு ஏமாந்ததே இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. பெற்றோர்களுக்கு தெரியாமல் கைபேசி வழியாக ஆன்லைனில் விளையாடும் போது வங்கி கணக்கு என்னுடன் இணைக்கப்பட்டிருக்கும் போன்பே போன்ற ஏதாவது ஒரு வழியில் பணத்தை எடுத்துக் கொள்கிறார்கள்.

மேலும் மாணவர்களுக்கு இழந்த பணத்தை மீட்கலாம் என்று கூறி மூளைச்சலவை செய்து வங்கிக் கணக்கிலிருந்து முழுவதும் பணத்தை எடுத்துக் கொள்கிறார்கள். இதைப்போன்று சமீபத்தில் மதுரை மாணவி ஒருவரால் பெற்றோர் வீடு கட்ட வைத்திருந்த 7 லட்சம் ரூபாய் வரை பறிபோனது. அதேபோல் நமக்கு யார் என்று தெரியாத ஒருவர் நமக்கு தனியாக ஹாய் என்று கூறி மெசேஜ் அனுப்பி நம்மிடம் பழக ஆரம்பிப்பார். நாளடைவில் அது வீடியோ காலில் பேசும் அளவிற்கு மாறி அந்தரங்கம் வரை செல்லும். அதை வீடியோவாக எடுத்து மிரட்டி பணம் பறிப்பார்கள். இப்படி ஏமாந்தவர்கள் 10% பேர் கூட புகார் கொடுப்பதில்லை.

மதுரை களிமங்கலம் அருகே, குன்னத்தூரை சேர்ந்தவர் செந்தில் ராஜா. இவர் தனியார் நிறுவன எலக்ட்ரீசியன். இவருடைய ஸ்டேட் வங்கி ஏடிஎம் கார்டு காணாமல் போனது. அதனால் அந்த கார்டை பிளாக் செய்ய கூகுளில் பார்த்து ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டபோது ரிங் ஒழித்து கட் ஆகியது. சில நிமிடங்களில் வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து பேசுவதாக கூறி, செந்தில் ராஜாவை தொடர்பு கொண்ட நபர் வங்கி விபரங்களை பற்றி விசாரித்தார்.

அதன்பின்னர் கூகுள் பே மூலமாக பண பரிவர்த்தனை நடக்கிறதா என்று உறுதி செய்ய வங்கி கணக்கிலிருந்து அடுத்தடுத்து மொத்தம் 99,999 ரூபாய் அனுப்புமாறு கூறினார். செந்தில் ராஜாவும் அதன்படி செய்ய பணம் பறிபோனது. இதுபற்றி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். ஏடிஎம் கார்டு காணாமல் போன பதட்டத்தில் அந்த நபர் கேட்ட பணத்தை அனுப்பி ஏமாந்ததாக கூறினார். நம்மையறியாமலேயே நம்மை விபரங்கள் பல இடங்களில் பரவி கிடக்கிறது. அதுவே நமக்கு ஆபத்தில் முடிகிறது. எனவே மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |