Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

விலை உயர்ந்த முட்டை கோழிகள்…. காரணம் என்ன….? விளக்கமளித்த சங்க நிர்வாகி….!!!!

முட்டை கோழியின் விலை உயர்வு குறித்து சங்க நிர்வாகியான வாங்கிலி சுப்பிரமணியம் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்படும் முட்டை கோழிகள் 560 நாட்கள் வரை முட்டையிடும். அதன் பின் அவை இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுகிறது. அவ்வாறு வயது முதிர்ந்த முட்டைக்கோழிகள் மாதந்தோறும் சுமார் 2500000 வீதம் கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு இறைச்சிக்காக அனுப்பப்படுகிறது. குறிப்பாக முட்டை விலை உயர்ந்த போதெல்லாம் முட்டை கோழிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும். அந்த நேரத்தில் மட்டுமே 85 முதல் 90 வாரம் வரையில் இருக்கும் முட்டை கோழிகளை விற்பனை செய்வார்கள்.

ஆனால் முட்டைகள் குறையும்போது 70 முதல் 75 வாரத்திலேயே முட்டை கோழிகளை விற்பனை செய்து விடுவர். கடந்த சில நாட்களாக கடுமையாக உயர்ந்து வந்த முட்டை கோழி விலை தற்போது 110 கிலோவை தொட்டு இருக்கிறது. இதைப்பற்றி தமிழ்நாடு முட்டை கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத் தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் கூறியதாவது “முட்டை உற்பத்தியாகும் செலவை விட, குறைந்த கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டதால் பண்ணையாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகின்றது.

இதனால் சுமார் 8 மாதமாக பண்ணைகளில் குஞ்சு விடுவதை பண்ணையாளர்கள் தவிர்த்து வருகின்றனர். மேலும் முட்டை விலை உயர்ந்து வருவதால் இருக்கின்ற குறைந்த கோழிகளையும் விற்பனை செய்வதற்கு யாருமே முன்வரவில்லை. எனவே முட்டை கோழிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுவே அதன் கொள்முதல் விலை உயர்ந்ததற்கு காரணம் ஆகும்” என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |