முட்டை கொள்முதல் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல தலைவர் வெளியிட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் விற்பனைக்காக தினமும் நான்கு கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த முட்டைகளில் ஒன்றரை கோடி முட்டைகள் கேரளாவுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும்.மீதமுள்ள முட்டைகள் தமிழகம் மற்றும் வட மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும். இந்நிலையில் கேரளா உள்பட பல்வேறு வட மாநிலங்களில் பறவை காய்ச்சல் நோய் கண்டறியப்பட்டுள்ளதால் தேசிய அளவில் முட்டை மற்றும் கோழி விற்பனை கடும் சரிவைச் சந்தித்துள்ளது.
இதன் காரணமாக பண்ணையாளர்கள் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயிக்கும் விலையை விட குறைவாக விற்பனை செய்து வருகின்றனர். மேலும் பொங்கல் பண்டிகைக்கு பிறகு முட்டை விற்பனை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் விற்பனையாளர்கள் குளிர் பதன கிடங்குகளிழும் முட்டைகளை சேமித்து வருகின்றனர். இதற்கிடையே தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆந்திராவில் வருகிற 18-ஆம் தேதியும் தமிழகத்தில் ஜனவரி 19ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
இதனால் சத்துணவுத் திட்டத்திற்கு 9 கோடி முட்டைகள் தேவை என்று தனியார் நிறுவனங்கள் தெரிவித்து வருகிறது. எனவே வருகிற 18-ஆம் தேதிக்கு பிறகு முட்டை கொள்முதல் அதிகரிக்க உயர வாய்ப்பு உள்ளது. ஆதலால் கோழிப்பண்ணையாளர்கள் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்யும் விலையில் இருந்து குறைத்து விற்பனை செய்ய வேண்டாம் என்று கூறியிருந்தார்.