Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அப்படி விற்கலாம்னு நினைச்சோம்… அதுக்குள்ள இப்படி ஆகிட்டு… விவசாயிகளின் கோரிக்கை…!!

தண்ணீரில் மூழ்கி அழுகிய முட்டை கோஸுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் முட்டைகோஸ் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த முட்டை கோஸ் தண்ணீரில் மூழ்கி அழுக ஆரம்பித்து உள்ளது. மேலும் ஊரடங்கு சமயத்தில் அனைத்து மார்கெட்டுகளும் மூடப்பட்டதால் அறுவடை செய்த முட்டை கோசை விற்பனைக்கு கொண்டு செல்ல இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து விவசாயிகள் கூறும் போது, மார்க்கெட்டுகள் மூடப்பட்ட சமயத்திலும் அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் வரும் முட்டைகோஸை வாகனங்களில் வைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆனாலும் அறுவடைக்கு தயாராக இருந்த முட்டைகோஸ் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகி விட்டதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். எனவே தங்களது நலனை கருத்தில் கொண்டு அரசு நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |