இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இறைச்சிக்கடை உரிமையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள புது நடுவலூர் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இறைச்சி கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் செந்தில்குமார் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து செந்தில்குமார் மருதையன் கோவில் அருகே சென்று கொண்டிருக்கும் போது அவ்வழியாக வேகமாக சென்ற கார் இவரின் இரு சக்கர வாகனம் மீது மோதி விட்டது.
இதனால் படுகாயமடைந்த செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.