கன்னி வலையை பயன்படுத்தி முயலை வேட்டையாட முயற்சி செய்த இரண்டு நபர்களை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வெண்பாவூர் காட்டுப் பகுதியில் காட்டு விலங்குகளை வேட்டையாடுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் இரண்டு நபர்கள் முயலை வேட்டையாட முயற்சி செய்வதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் படி வனத்துறையினர் வெண்பாவூர் காட்டுப் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அங்கு கன்னி வலையை விரித்து முயலை வேட்டையாட முயற்சி செய்த இரண்டு நபர்களை வனத்துறையினர் பிடித்து விட்டனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் இருவரும் கொட்டாரக்குன்று பகுதியில் வசிக்கும் மோகன் மற்றும் சிவா என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து முயலை வேட்டையாட முயன்ற குற்றத்திற்காக காவல்துறையினர் இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.