Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பையில் இருந்தது என்ன….? வசமாக சிக்கிய நால்வர்…. வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

முயலை வேட்டையாடிய பெண் உள்பட 4 பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள புண்ணியவாளன்புரம் பகுதியில் வனத்துறையினருக்கு சிலர் முயல் வேட்டையில் ஈடுபடுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி நெல்லை – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புண்ணியவாளன்புரம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் பெண் உள்பட 4 பேர் வேட்டை நாய்களுடன் நின்று கொண்டிருந்தனர். இதனையடுத்து வனத்துறை அலுவலர்கள் அவர்களை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.

அந்த விசாரணையில் அவர்கள் அழகியநம்பிபுரம் பகுதியில் வசிக்கும் பொன்னுசாமி என்பவரின் மகளான ரோகினி, 17 வயதுடைய 2 சிறுவர்கள் மற்றும் 11 வயது சிறுவன் என்பது தெரியவந்துள்ளது. அதன்பின் அவர்கள் 4 பேரும் இணைந்து முயலை வேட்டையாடியது தெரியவந்துள்ளது. மேலும் அவர்களின் பையை சோதனை செய்ததில் அதில் இரண்டு முயல்கள் இறந்த நிலையில் இருந்ததை வனத்துறையினர் பார்த்துள்ளனர். இதனையடுத்து வனத்துறையினர் முயலை வேட்டையாடிய குற்றத்திற்காக அவர்களுக்கு 5000 ரூபாய் அபராதம் விதித்தனர்.

Categories

Tech |