Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ரொம்ப நாளா இருந்திச்சு… ஆத்திரத்தில் வாலிபர் செய்த காரியம்… கைது செய்த காவல்துறையினர்…!!

நிலத்தகராறு காரணத்தினால் அண்ணனே மண்வெட்டியால் அடித்து கொலை செய்த தம்பியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கொல்லப்பட்டி கிராமத்தில் பரசுராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜா என்ற மகன் உள்ளார். இவர் விவசாயியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தம்பி அம்மாசிக்கும் ராஜாக்கும் இடையே பொது வெளிபாதை குறித்து நிலத் தகராறு இருந்துள்ளது. இதனை அடுத்து அம்மாசி தன்னுடைய நிலத்தில் வேலை பார்த்து கொண்டிருக்கும் போது அங்கே வந்த அண்ணன் ராஜா அவரிடம் நிலை பிரச்சினை குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ராஜாவின் தலையில் அம்மாசி மண்வெட்டியால் தாக்கியுள்ளார்.

இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்துள்ளார். அதனால் சம்பவ இடத்திலேயே ராஜா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதனைப் பார்த்து அம்மாசி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைவாக சென்று விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர் கொலை செய்யப்பட்ட ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அண்ணனை அடித்துக் கொன்ற தம்பியை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |