Categories
அரசியல் மாநில செய்திகள்

தம்பி அனுப்பி வச்ச போட்டோ…! சுடுகாடு மாதிரி இருக்கே…. நொந்து போன சீமான் …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், உங்க மனசாட்சியை தொட்டு சொல்லுங்க. நாட்டில் இலவசமாக இருந்து இருக்க வேண்டியது அறிவை காக்க வேண்டிய கல்வி, உயிரை காக்க வேண்டிய தரமான மருத்துவம், குடிநீர். ஒரு நாட்டின் வளத்திலேயே உடல் நலமும், அறிவு வளமும் தான். இப்போ இந்த  இரண்டையுமே வியாபாரம் ஆகிட்டு,  நீங்க என்ன இலவசம் கொடுப்பீங்க.

நம்ம பிள்ளைகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்குறாங்க. அவங்க அந்த கல்லூரியில் போய் சேருவதற்கு எவ்வளவு பணம் கட்டியிருப்பாங்க ?  பணம் கட்டி தானே இடம் வாங்கி இருக்காங்க. அப்போ அந்த பணத்தை யார் கொடுக்கிறது ? அப்போ நீங்க அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளின் தரத்தை உயர்த்தி கொடுத்தீர்கள் என்றால் நன்றாக இருக்கும்.

கேரளாால தனியார் பள்ளிக்கு இணையாக 30 சதவீதம் அரசு பள்ளிகளின் தரத்தை மாத்திட்டாங்க. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் எல்லாம் பள்ளிக்கூடத்தை பாருங்க. நட்சத்திர விடுதி மாதிரி கட்டி வச்சிருக்காங்க. அப்போ அவரு பெருமையா பேசுறாரு, சாதிக்குறாரு. நம்ம அரசு பள்ளிக்கூடம் சுடுகாடு மாதிரி இருக்கு.  சுடுகாடு கல்லூரி மாதிரி இருக்கு. பெரிய நட்சத்திர விடுதி மாதிரி இருக்கு.

அன்னைக்கு ஒரு தம்பி எடுத்து போட்டு விட்டிருக்காரு. இது பள்ளிக்கூடம் சுடுகாடு மாறி இருக்கு, சுடுகாடு பெரிய நட்சத்திர விடுதி மாதிரி கட்டி வச்சு இருக்கீங்க. அது தான் கொடுமையா இருக்கு. அதுதான் நம்ம பேசுறோம். ஒரு கேள்வி வருதுல்ல. இலவசத்தில் இழக்கின்ற பணத்தை எப்படி எடுக்குறீங்க ? என்கிட்ட இருந்து வரி எடுத்து எனக்கு கொடுக்கிறதுக்கு. அதுக்கு பேரு இலவசம் அப்படின்னு எப்படி சொல்றீங்க?

அது தேர்தல் வரும் போது மட்டும் அறிவிக்கிறீர்களே… எப்படி ? எப்படி அறிவிக்கிறீங்க ? இப்போ பாருங்க…  ஓசூர்ல ஏதோ மிதிவண்டி கொடுத்து இருக்காங்க. மிதிவண்டியில் ஜாதி பெயரை எழுதி வைத்து…  அது தாழ்த்தப்பட்ட பிள்ளைகளுக்கு தனியா சைக்கிளை நிறுத்து, இதுதான் திராவிட மாடலா ? இது தான் நீங்க காப்பாத்துற சமூக நீதியா ? வெறுப்பு வருமா ? வராதா ? என ஆதங்கத்தை தெரிவித்தார்.

Categories

Tech |