Categories
உலக செய்திகள்

“என் பிள்ளை தனிமையை உணர கூடாது” பாசக்கார அப்பாவின் செயல்…. குவியும் பாராட்டு…!!

தன்னுடைய மகனுக்காக பாசக்கார தந்தை ஒருவர் செய்த செயல் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

கனடாவில் வசித்து வருபவர் டெரக் ப்ரு சீனியர் என்பவரின் மகன் டெரக் ப்ரு(8). இந்த சிறுவனுக்கு சிறுவயதிலிருந்தே மார்பு பகுதியில் வட்ட வடிவிலான அடையாளம் ஒன்று இருந்திருக்கிறது. இதனால் தன்னுடைய மகனுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக அவருடைய தந்தையும் அதே இடத்தில் மகனுக்கு உள்ளதைப் போலவே தன்னுடைய மார்பிலும் பச்சை குத்திக்கொண்டுள்ளார். இது குறித்து சிறுவனின் தந்தை டெரக் ப்ரு சீனியர் கூறுகையில், “என் மகன் பிறந்த போதே அவருடைய மார்பு பகுதியில் பெரிதாக அடையாளம் ஒன்று இருந்தது. தற்போது அவனுக்கு எட்டு வயதாகிறது.

ஆனால் நீச்சல் குளத்தில் குளிக்கும் போது கூட அந்த அடையாளத்தை யாரும் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக சட்டை அணிந்து கொண்டுதான் குளிக்கிறான். அதேபோல சில இடங்களிலும் அவன் தனிமையை உணர்கிறான். அது சற்று எனக்கு வேதனையாக இருந்தது. எனவே என்னுடைய மகனுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் என்னுடைய உடம்பிலும் அவனோடு உடம்பில் இருப்பது போல பச்சை குத்தி இருக்கிறேன். ஆனால் பச்சை குத்த சீக்கிரம் முடிந்து விடும் என்று நினைத்தேன். ஆனால் பச்சை குத்தி முடிக்க சுமார் 30 மணி நேரம் எடுத்தது.

மேலும் அந்த இடத்தில் வலி அதிகமாக இருந்தது. ஆனால் என்னுடைய மகனுக்காக அந்த வலியை தாங்கிக் கொண்டேன். என்னுடைய பிள்ளைக்கான அந்த வலி எனக்கு சுகமாக இருந்தது” என்று உருக்கமாக கூறியுள்ளார். இதுகுறித்து சிறுவன் பேசுகையில், “என்னுடைய அப்பா எனக்காக இப்படி செய்வார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. ஆனாலும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார். தன்னுடைய மகன்  தனிமையை உணர்ந்து விடக்கூடாது என்பதற்காக பல மணி நேரம் வேதனையை அனுபவித்துக் கொண்ட பாசக்கார தந்தை செய்த செயலுக்கு நெட்டிசன்கள் தங்களை பாராட்டுகளை  தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |