முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி தமிழில் ட்விட் செய்துள்ளார்.
இன்று எம்ஜிஆரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி தமிழில் ட்விட் செய்துள்ளார். அதில் பாரத ரத்னா எம்ஜிஆர் பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். திரையுலகிலும், அரசியலிலும் அவர் பரவலாக மதிக்கப்பட்டார்.
முதலமைச்சராக இருந்தபோது வறுமையை ஒழிக்கவும், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் பல முயற்சிகளைத் தொடங்கினார். அவரது பிறந்தநாளில் எம்ஜிஆருக்கு புகழ் வணக்கம் என்று பதிவிட்டுள்ளார்.