Categories
தேசிய செய்திகள்

“என் இனிய நண்பர் மற்றும் வியத்தகு இந்திய மக்களுக்கு சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்”… இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு…!!

இன்று சுதந்திர தின விழாவை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இன்று நாடு முழுவதும் 74 வது சுதந்திர தின விழா கொண்டாடப்படும் நிலையில் பல்வேறு நாட்டு தலைவர்களும் இந்தியாவுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது டுவிட்டரில் பதிவில், “எனது நல்ல நண்பரான இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கும், வியக்கத்தகு இந்தியாவின் அனைத்து

மக்களுக்கும் மகிழ்ச்சிகரமான சுதந்திரதின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் பெருமைகொள்ள பல உள்ளன” என தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்திருந்த இஸ்ரேல் பிரதமருக்கு இந்திய பிரதமர் நன்றி தெரிவிக்கும் வகையில் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த எனது நண்பர் நெதன்யாகுவுக்கும் அற்புதமான இஸ்ரேல் மக்களுக்கும் நன்றி. இந்தியா மீதான இஸ்ரேல் பிரதமரின் சிறப்பான அன்பு தெளிவாக காணப்படுகிறது. இஸ்ரேலுடன் அதிகத்துவரும் வலுவான உறவுகள் குறித்து இந்தியா பெருமிதம் கொள்கிறது” என பதிவிட்டிருந்தார்.

 

Categories

Tech |