சித்ராவின் கொலை வழக்கை அவரது தாயார் சிபிசிஐடி விசாரிக்க முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடித்து பிரபலமானவர் சின்னத்திரை நடிகை சித்ரா. இவர் கடந்த டிசம்பர் 9ஆம் தேதி அன்று தன்னுடைய வருங்கால கணவருடன் ஹோட்டலில் தங்கியிருந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதன் காரணமாக அவருடைய கணவரை கைது செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். இதையடுத்து இந்த வழக்கு ஆர்டிஓ விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன் பிறகு ஆர்டிஓ அதிகாரி திவ்யஸ்ரீ கடந்த 14ம் தேதி விசாரணையை ஆரம்பித்துள்ளார்.
இந்த விசாரணையில் சித்ராவின் பெற்றோர், உறவினர்கள், சகோதரர்கள் என அனைவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இந்த விசாரணை அனைத்தும் முடிவுக்கு வந்து வலக்கை பதிவு செய்து அறிக்கையை ஆர்டிஓ அதிகாரி சமர்ப்பித்துள்ளார். இந்நிலையில் இந்த கொலை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் தனிப்பிரிவில் சித்ராவின் தாயார் மனு அளித்துள்ளார். ஆர்டிஓ விசாரணை முடிந்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் தாயார் சிபிசிஐடி விசாரணை கோரி மனு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.