Categories
சினிமா தமிழ் சினிமா

”என் இனிய நண்பர் விரைவில் குணமடைய வேண்டும்”….. கமல்ஹாசன் ட்விட்டர் பக்கத்தில் பதிவு….!!

‘என் இனிய நண்பர் விரைவில் குணமடைய வேண்டுமென’ கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இவருக்கு ரத்த நாளத்தில் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இவர் குணமடைந்து வருவதாகவும், ஒரு சில நாட்களில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று திரையுலக பிரபலங்கள் பலரும் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

ரஜினி, கமல் தங்கள் கனவுப்படங்களில் படுதோல்வியைச் சந்தித்தது ஏன்…  ரசிகர்களைப் புரிந்துகொள்ளவில்லையா? | Why the dream films of Rajinikanth and  Kamal Haasan became box ...

அந்த வகையில், நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ”மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் என் இனிய நண்பர் ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து பூரண நலமுடன் வீடு திரும்ப வேண்டும் என விரும்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |