90’s கிட்ஸ்க்கு பிடித்தமான மை டியர் பூதம் சீரியலில் நடித்த பிரபல நடிகையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது
தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையான நிவேதா தாமஸ் தமிழ் திரையுலகில் விஜய்க்கு தங்கையாகவும் ரஜினி கமலுக்கு மகளாகவும் நடித்து வருகின்றார். ஆனால் அவர் தெலுங்கு திரையுலகில் கொடிகட்டிப் பறக்கும் கதாநாயகியாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் 90’s கிட்ஸ் தலையில் வைத்துக் கொண்டாடும் சீரியல் ஒன்றில் இவர் நடித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அந்த சீரியல் பெயர் மைடியர் பூதம் அதில் பள்ளி மாணவியாக நிவேதா நடித்துள்ளார் என்ற தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.