Categories
தேசிய செய்திகள்

என் கனவுல கடவுள் வந்து சொன்னாரு… அதான் இப்படி செஞ்சோம்… இளம் பெண் செய்த விபரீத காரியம்…!

கடவுள் கனவில் வந்ததாக கூறி இளம்பெண் உயிருடன் ஜீவசமாதி அடைய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் கடம்பூர் அடுத்த சஜேதி பகுதியை சேர்ந்தவர் ராம் சஜீவன் என்பவர். இவருக்கு 50 வயதுடைய கோமதி என்னும் மனைவி இருக்கிறார். இந்நிலையில் கோமதி மகாசிவராத்திரியன்று தனது கனவில் கடவுள் வந்ததாக கூறி ஜீவ சமாதி அடையப் போவதாக தனது குடும்பத்தாரிடம் கூறியுள்ளார்.

UP woman gets herself buried in pit to appease god, saved by police

அதன்படி அவரது வீட்டின் முன் உறவினர்கள் அக்கம் பக்கத்தினருக்கு தெரியாமல் குழி தோண்டி பூஜை செய்தனர். பின்பு கோமதி தேவி குழிக்குள் இறங்கி அமர்ந்து தியானம் செய்தார். அதன்பின் உறவினர்கள் கோமதி மீது துணியை போர்த்தி மண்ணைப் போட்டு மூடி உள்ளனர். இச்சம்பவத்தை கண்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குழிக்குள் உயிருடன் புதைக்கப்பட்ட கோமதி தேவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பெற்று நலமுடன் உள்ள கோமதி தேவியை மனநல சிகிச்சைக்கு அனுப்பி வைப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |