Categories
தேசிய செய்திகள்

டெல்லி சட்ட சபை தேர்தல் : ஆதரவு தெரிவித்த கமல்.. நன்றி தெரிவித்த கெஜ்ரிவால்..!!

நடிகர் கமல் ஹாசன் ஆதரவு தெரிவித்து ட்விட் செய்ததையடுத்து, தற்போதைய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நன்றி தெரிவித்துள்ளார்.  

தலைநகர் டெல்லியில் வருகின்ற பிப்ரவரி 8-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து பிப்ரவரி 11 ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகிறது.தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளதால் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்க அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி மும்முரமாக களப்பணியாற்றி வரும் அதேவேளையில், எப்படியாவது இந்தமுறை ஆட்சியைப்பிடித்து விடவேண்டும் பா.ஜ.க தீவிர முனைப்பு காட்டி வருகிறது.

இந்த நிலையில் தற்போதைய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு தரும் வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், பிரபல நடிகருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கெஜ்ரிவாலின் பேச்சு ஒன்றை பகிர்ந்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

கமல் கூறியதாவது, அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு சாதனையாளர். அவரின் உரை பிரமிக்கத்தக்கது. கெஜ்ரிவாலை ஒரு தலைவராக பின் தொடராதீர்கள். அவரை அப்படியே உள்வாங்கி கொள்ளுங்கள். இது அறிவுரையல்ல. நமக்கு விடப்பட்டிருக்கும் ஒரு சவால். நான் இந்த சவாலை ஏற்றுக்கொண்டுள்ளேன். என்னுடைய தோளோடு தோள் நிற்கும் என்  சகோதரரருக்கு நான் சல்யூட் செய்கிறேன். டெல்லி தொலைவில் இல்லை. இவ்வாறு  கமல் பதிவிட்டுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் கமல்ஹாசனின் டுவிட்டர் பதிவை சுட்டிக் காட்டி கெஜ்ரிவால் கூறியிருப்பது,  நன்றி கமல் ஜி. கடந்த 70 ஆண்டுகளில் நம் நாட்டு மக்களை வேண்டுமென்றே கல்வியறிவற்றவர்களாகவும் ஏழைகளாகவும் வைத்துள்ளனர். டெல்லி முதல்வரான 5 ஆண்டுகால எனது அனுபவத்தில் உணர்ந்தது. அரசாங்கத்தில் பணத்திற்கு பஞ்சமில்லை, பணம் இல்லை என்பது பொய்யானது. ஆட்சியாளர்களுக்கு நல்ல நோக்கம் வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |