Categories
கிரிக்கெட் விளையாட்டு

“எனக்கு பிடித்த பேட்ஸ்மேன் இவர்தான்”… பிரையன் லாராவை கவர்ந்த இந்திய வீரர் யார்?

எனக்கு பிடித்த பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல்” என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான்  பிரையன் லாரா  தெரிவித்துள்ளார்

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் தொடக்க பேட்ஸ்மேனாக அறிமுகமானவர் கே.எல்.ராகுல். இவர் டெஸ்ட் மற்றும் டி 20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடினார். ஆனால் இங்கிலாந்து தொடருக்கு பின் மோசமாக ஆடியதன் காரணமாக அவர் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதனால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதாக அனைவராலும் கருதப்பட்டது. ஆனால் அவர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதன் மூலம் டி 20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இடம்பிடித்துள்ளார். இந்த இரண்டிலும் அபரமாக ஆடி வருகின்றார். விக்கெட் கீப்பராகவும் இருப்பதன் காரணமாக அவரை மிடில் ஆர்டரில் இறங்கி விளையாட அணியின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Image result for My favorite batsman is KL Rahul.

அவர் விரைவில் டெஸ்ட் அணியில் இடம்பிடிப்பார் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் “கே.எல்.ராகுலின் பேட்டிங் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும்” என்று மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் ஜாம்பவான் பேட்ஸ்மேன் பிரையன் லாரா கூறியுள்ளார்.

கே.எல்.ராகுல் குறித்து பிரையன் லாரா கூறுகையில், நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் அவர் ஏன்அணியில்  சேர்க்கப்படவில்லை என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவரது ஆட்ட நுணுக்கம், பேட்டிங் செய்வதை நான் பார்த்த வகையில் எந்த அணிக்கு எதிராகவும் அவருக்கு பிரச்சனை இருப்பது போலத் தெரியவில்லை.

எல்லா வகையான கிரிக்கெட்டையும் விளையாடுவதற்கான திறன் அவருக்கு உள்ளது. அவர் தனது இடத்தைப் தற்காத்துக்கொள்ளும் திறனையும் பெற்றிருக்கிறார்.  இந்திய கிரிக்கெட் அணியில் விராட் கோலிக்கு அடுத்தபடியாக முதல் நபராக அவரது பெயரை நான்  கூற முடியும். எனக்கு பிடித்த பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |