நாட்டு மக்கள் காப்பாற்றுவதே எனது முதல் பணி என்று பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பேசினார்.
இந்தியாவில் 500கும் மேற்பட்டோரை கொடூர கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. 10 பேர் உயிரிழந்த நிலையில் இரண்டாவது முறையாக கொரோனா குறித்து நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி பேசினார். அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு என அறிவித்த பிரதமர் மோடி வதந்திகளையும், மூட நம்பிக்கைகளையும் நம்ப வேண்டாம். அரசின் ஆலோசனைகளை மட்டும் மக்கள் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
நாடு மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்திக்கும். ஆனால், இதனை தொடருவதை தவிர வேறு வழி இல்லை. ஒவ்வொரு குடிமகனையும் காப்பாற்றுவதே என் முதல் பணி. அடுத்த 11 நாட்களில் மேலும் ஒரு லட்சம் பேரை தாக்கும். இதன் மூலம், கொரோனா எவ்வளவு வேகமாக பரவும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம். கொரோனா பரவத் தொடங்கினால், அதை தடுத்து நிறுத்துவது பெரிய சவால். சீனா, அமெரிக்கா, இத்தாலி, ஈரான் போன்ற நாடுகள் அதனால் தான் சிரமப்படுகின்றன. மருத்துவ துறையில் சிறந்து விளங்கும் அமெரிக்கா, இத்தாலியும் திணறுகின்றன.அந்த நாடுகளில் இருந்து பெற்ற படிப்பினை மூலம், கொரோனாவை ஓரளவு தடுக்கலாம் என்று மோடி அறிவுறுத்தினார்.