அஜீத்தை பாராட்டி கருத்து தெரிவித்துள்ள நடிகை ஸ்ரீரெட்டியை அஜித் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வந்தவர் நடிகை ஸ்ரீரெட்டி . சமீபத்தில் நடைபெற்ற பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தையும் வன்மையாக கண்டித்த இவர் , பாதிக்கப் பட்ட பெண்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தப் போவதாகவும் கூறினார். ஆந்திராவில் வசித்து வந்த இவர் அங்கிருந்து வெளியேறி தற்போது சென்னையில் வசித்து வருகிறார் .ரெட்டி டைரி என்ற பெயரில் இவரது வாழ்க்கை வரலாறு படமாக தயாராகிறது. இந்நிலையில் நடிகை ஸ்ரீரெட்டி தனது சமூக வலைதள பக்கத்தில் நடிகர் தல அஜித்குமாரை பாராட்டி பதிவு செய்துள்ளார் .
அவர் பதிவிட்டுள்ள கருத்தில் , நான் “தல அஜித்குமாரின் படத்தை பார்க்காமல் உறங்க செல்வது இல்லை. தல அஜித் தமிழ்நாட்டில் பிரபலமான நம்பர் ஒன் ஹீரோ. எந்த சர்ச்சைகளில் சிக்காமல் விலகியே இருப்பார். அஜித் அவர்கள் மிகவும் தன்மையாக பேசுவார். குடும்பத்தை மதிக்க கூடியவர். இவர் தனது ரசிகர்களை மிகவும் நேசிக்கிறார். பாசமான கணவர் மற்றும் சிறந்த தந்தையாக உள்ளார் . கோடிக்கணக்கான பெண்களின்மனதை திருடிக்கொண்டவர். எனது தலை உங்கள் காலில் தல என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவானது தலஅஜித்தின் ரசிகர்களுக்கு அதிக மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை வைரலாக்கி வருகிறார்கள் தல அஜித் ரசிகர்கள்.