பிரதமர் மோடி தமிழ்நாட்டின் மதுரையை சேர்ந்தவரை வெகுவாக பாராட்டியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி வாராந்திர வானொலி நிகழ்ச்சியான மங்கி பாத் மூலமாக மக்களிடம் பேசி வருகின்றார். இன்றய நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அரசு எடுத்து வரும் திட்டங்கள், மக்கள் மேற்கொண்ட சேவை உள்ளிட்டவற்றை தான் பட்டியலிட்டு பேசினார். குறிப்பாக இந்த பேச்சை பொருத்தவரை நாட்டு மக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டிருக்கிறார்.
குறிப்பாக சில முக்கியமான நபர்களை எடுத்துக்காட்டாக சொல்லியிருக்கின்றார். தமிழகத்தின் மதுரையைச் சேர்ந்த மோகன் என்பவர் தனது மகனின் படிப்பிற்கு வைத்திருந்த சேமிப்பு பணம் 5 லட்சத்தை ஏழை மக்களுக்கு செலவிடுவதற்கு செலவு செய்திருக்கிறார். அது எனது நெஞ்சை தொட்டு இருக்கிறது என்ற வார்த்தையை பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பொதுவாக மத்திய அரசாங்கமும், பாரதிய ஜனதா ஆட்சியும் தமிழகத்தை வஞ்சிக்கிறது. தமிழகத்தை கண்டுகொள்ளவில்லை என்று ஏராளமான குற்றச்சாட்டுகள் இங்குள்ள அரசியல் கட்சியினால் முன்வைக்கப்பட்ட நிலையில், மங்கி பாத் நிகழ்ச்சியில் தமிழர் செய்த உதவியை பிரதமர் மோடி குறிப்பிட்டு பேசியிருப்பது பாஜகவினருக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் இது மகிழ்ச்சியான நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.