இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள டிக்டாக் செயலியின் தலைமைச் செயல் அதிகாரி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
சென்ற ஜூன் மாதத்தில் டிக்டாக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்ற கெவின் மேயர், அவருடைய பதவிக் காலத்தில் தான் இந்தியாவில் டிக்டாக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிலும் டிக்டாக் செயலி சிக்கலை எதிர்கொண்டுள்ளது. இதனால் மனமுடைந்த மேயர் தனது அலுவலக பணியாளர்களுக்கு கடிதம் ஒன்று எழுதி வைத்துள்ளார்.
அந்தக் கடிதத்தில் தான் மனமுடைந்து என்னுடைய பணியை ராஜினமா செய்துவிட்டு செல்வதாகவும், மனது மிகவும் கனமாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும் அவருடைய மேயர் பதவிக்கு தற்காலிகமாக டிக்டாக் நிறுவனத்தின் பொது மேலாளளர் வனேசா பாப்ஸ் இடைக்கால சிஇஓ ஆக பதவி வகிப்பார் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.