குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் ரசிகர்களின் செயலால் “ஒரு நொடி என் இதய துடிப்பே நின்றுவிட்டது” என்று பதிவிட்டுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைப் பெற்றது. இந்நிகழ்ச்சியை தொடர்ந்து இதில் பங்கேற்ற பலர் படங்களில் பிஸியாக நடித்து வருகின்றனர். அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் அஸ்வின் தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதனுடன் “என் இதய துடிப்பே நின்றுவிட்டது” என்றும் குறிப்பிட்டுள்ளார். அது என்னவென்றால் இளம் பெண்களின் மனதை நடிகர் அஸ்வின் குமார் திருடியதற்காக அவர் கைது செய்யப்பட்டார் என்ற மீம்ஸை அவர் பதிவு செய்து இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.