Categories
அரசியல் சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பக்கத்துல தான் என் வீடு இருக்கு… எப்போ வேணும்னாலும் என் வீட்டுக்கு வாங்க… தொண்டர்களுக்கு இபிஎஸ் அழைப்பு!!

சேலம் மாவட்டத்தில் மாற்று கட்சியில் இருந்து விலகி அதிமுகவின் பலர் இணைந்த விழாவில் பேசிய அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, 2023 ஆம் ஆண்டு பிறக்க இருக்கின்றது. இந்த ஆண்டு துவக்கமே மிக மகிழ்ச்சிகரமாக இருப்பதற்கு இது ஒரு சான்றாக இருக்கிறது. மேடையில் இருக்கின்றவர்களும் சரி, கழகத்திலே இணைகின்றவர்களும் சரி,  பார்த்த முகம். பார்த்த முகம் எல்லாம் இன்றைக்கு எங்களோடு இணைந்து பணியாற்றுகின்ற பொழுது,  இனி எதிர்காலத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை எவராலும் வீழ்த்த முடியாது என்பதற்கு இது ஒரு சான்று.

நம்முடைய பகுதியில் இருக்கிறவர்கள், அருகிலே இருக்கிறவர்கள் நீங்கள் எந்த நேரத்திலும் என்னை சந்திக்கலாம். உங்களுடைய பகுதியில் இருக்கிற பிரச்சினைகளை என் இடத்தில் சொல்லுகின்ற பொழுது,  அதை செய்வதற்கு ஒரு வாய்ப்பு எங்களுக்கு வழங்கி இருக்கிறீர்கள். நம் கிராமத்தில் சொல்லுவோம் உள்ளுர் நஷ்டமும் சரி,  வெளியூர் இலாபமும் சரி அப்படின்னு சொல்லுவாங்க…  கிராமத்தில் தான் பேசுகிறோம். அதுபோல உள்ளூரில் இருக்கிறவங்கதான் நமக்கு  உதவிக்கரம்,  நேசக்கரம் நீட்டுவார்கள்.

வெளியில் போய் எவரையும் நீங்க பார்க்க முடியாது. அவுங்களுக்கு நம்ம கஷ்டமும் தெரியாது, பிரச்சனையும் தெரியாது. ஆனால் என்னை பொறுத்தவரை, அருகிலேயே தான் என்னுடைய வீடு இருக்கின்றது. நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம். நம்முடைய பகுதி வளர்ச்சி அடைய…. பகுதி மக்களுக்கு தேவையான நன்மையை கிடைக்க….  என்னால் முடிந்த வரை உங்களுக்கு உதவி செய்வேன் என்று இந்த நேரத்தில் ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

Categories

Tech |