Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னுடைய திருமணம் கண்டிப்பா காதல் திருமணம் தான்”…. நடிகர் அசோக் செல்வன் ஓபன் டாக்…!!!!

நடிகர் அசோக் செல்வன் திருமணம் குறித்து பேசி உள்ளார்.

பிரபல நடிகரான அசோக் செல்வன் தமிழில் தெகிடி திரைப்படம் மூலம் பிரபலமானார். இவர் நடித்த மன்மத லீலை, ஓ மை கடவுளே உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்கு தனித்த அடையாளத்தை பெற்று தந்தது. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான நித்தம் ஒரு வானம் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் வசூலை குவித்தது.

இந்த நிலையில் இத்திரைப்படத்தின் நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் நடிகர் அசோக் செல்வன் பங்கேற்றார். அப்போது அவரிடம் திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டதற்கு அவர் கூறியதாவது, திருமணம் நடக்கும் போது நடக்கும். அடுத்த வருடம் நடந்தாலும் நடக்கலாம். இப்போது நான் சினிமாவை தான் காதலிக்கிறேன். தனக்கு நிச்சயக்கப்பட்ட திருமணம் சரிபட்டு வராது என கூறியுள்ளார்.

Categories

Tech |