Categories
தேசிய செய்திகள்

எங்க அம்மா ஞாபகமா அவங்க செல்போன் எனக்கு வேணும்… தாயை இழந்த 9 வயது சிறுமியின் வேண்டுகோள்…!!!

கர்நாடக மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்த தாயின் செல்போனை தன்னிடம் கொடுக்குமாறு 9 வயது சிறுமி ஒரு உருக்கமான கடிதத்தை எழுதியுள்ளார்.

கர்நாடக மாநிலம் குடகு பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியின் மனைவி பிரபா என்பவர் கடந்த 16ஆம் தேதி கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த பிரபாவின் 9 வயது மகள் ஹிரித்திக்ஷா ஒரு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் எனது தாய்க்கு கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இருப்பினும் அவர்  தினமும் என்னுடன் பேசி வந்தார். ஆனால் 15 ஆம் தேதி அவருக்கு அழைத்தபோது அவர் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து 16ஆம் தேதி அவர் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மருத்துவமனையில் எனது தாயின் செல்போனை கேட்டதற்கு மருத்துவ நிர்வாகம் செல்போன் தொலைந்து விட்டதாக தெரிவித்தனர். அந்த செல்போனில் எனது தாயின் போட்டோவும், வீடியோவும் உள்ளது. எனது அம்மா ஞாபகமாக அந்த செல்போனை எப்படியாவது எனக்கு கொடுத்து விடுங்கள் என்று உருக்கமாக கடிதம் ஒன்றை அவர் எழுதியுள்ளார். இந்த கடிதம் சமூக வலைதளங்களில் வைரலனதை தொடர்ந்து கர்நாடக போலீஸ் இதனை வழக்காக பதிவு செய்து, செல்போனை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

Categories

Tech |