கொரோனாவால் உயிரிழந்த மூதாட்டியின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியையும், செல்போனையும் ஊழியர்கள் திருடி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியை சேர்ந்த ஜெகன்நாத என்பவரின் தாயார் பவானி. இவர் கொரோனா பாதிப்பு காரணமாக மே 11ஆம் தேதி கம்மனஹல்லி என்ற பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மே 19ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து அவரது மகன் மருத்துவமனையில் சென்று செல்போன் மற்றும் தங்கச்சங்கிலியை திரும்பத் தருமாறு கேட்டுள்ளார். அப்போது அவர்கள் அது போன்று எதுவும் இல்லை என்று கூறியுள்ளனர்.
இதுகுறித்து அவரது மகன் தெரிவித்ததாவது: “தான் என் தாயுடன் மே 16ஆம் தேதி வீடியோ காலில் பேசினேன். அப்போது எனது தாயின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை காணவில்லை. அவரிடம் கேட்டபோது ஐசியூவில் இருந்ததால் தங்கச்சங்கிலி அகற்றப்பட்டது தெரிவித்தார். எனது தாய் இறந்த பிறகு ஊழியர்கள் அதை கொடுக்க மறுத்துள்ளனர்”. எனவே 50 ஆயிரம் மதிப்புள்ள தங்க சங்கிலியும் அவரது செல்போனில் என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஜெகன்நாத் காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.