உத்திரப்பிரதேச மாநிலத்தில் தனது காதலனோடு சேர்ந்து தனது குடும்பத்தையே கொலை செய்த ஷப்னம் அலியின் தூக்கு தண்டனை மிக விரைவில் நிறைவேற்ற உள்ளது. இந்நிலையில் அவரது மகன் தனது தாயின் தூக்கு தண்டனையை குறைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உத்திரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தை சேர்ந்த சவுகத் அலி என்பவரின் மகளான ஷப்னம் அலி தனது காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் , குடும்பத்தினரை காதலனுடன் சேர்ந்து கொலை செய்தனர். 2008 ஆம் ஆண்டு இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 10 மாத குழந்தையும் விட்டு வைக்காமல் கொலை செய்தார். இதையடுத்து ஷப்னம் அலி மற்றும் அவரது காதலர் ஆகிய இருவருக்கும் தூக்கு தண்டனை அளிக்கப்பட்டது.
மேல்முறையீட்டில் அதே தண்டனை உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் பெண்களை தூக்கிலிடும் வசதி மதுரா சிறையில் மட்டும்தான் உள்ளது. கடந்த சில நாட்களாக தூக்கிலிடு பணியாளர் பவான் ஜல்லாத் அந்த இடத்தை மேற்பார்வையிட்டு வருகிறார். அதனால் விரைவில் தூக்கிலிடப்படுவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஷப்னம்மின் மகன் முகமத் தாஜ் எனது தாயை நான் மிகவும் நேசிக்கிறேன். ஜனாதிபதி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். என் தாய் காண மரண தண்டனையை குறைத்து அவருக்கு மன்னிப்பு வழங்குங்கள் என்று கூறியுள்ளார்.