Categories
மாநில செய்திகள்

தேசபக்தி கொண்ட ஒரு இந்தியரால் காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார் – கமல் ஹாசன் ட்விட்..!!

தேசபக்தி கொண்ட ஒரு இந்தியரால் காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார் என்று கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

நாதுராம் கோட்சே 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி காந்தியை சுட்டுக்கொன்றார். இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் (30 ஆம் தேதி) மகாத்மா காந்தியின் நினைவு தினம் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி காந்திஜியின் 72-ஆவது நினைவு தினத்தையொட்டி இன்று பலரும் அனுசரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவரும், பிரபல நடிகருமான கமல் ஹாசன் நினைவு தினத்தையொட்டி ட்விட்டரில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், “சீர்திருத்தப்பட்ட உலகில் மிகக் குறைந்த மற்றும் சராசரி விமர்சன வடிவம் படுகொலை ஆகும். உலக அமைதிக்கான மிக முக்கியமான தூதர் மற்றும் எனது தனிப்பட்ட முறையில் மிகச்சிறந்த வழிகாட்டி. இந்த நாளில் தேசபக்தி கொண்ட ஒரு இந்தியரால் சுட்டுக் கொல்லப்பட்டார். வரலாறு மீண்டும் நிகழக்கூடாது என்பதற்காக இந்தியா காந்திஜியை நினைவில் கொள்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |