தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 7 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி மகாபலிபுரத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு சமீபத்தில் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. இந்த தகவலை விக்னேஷ் சிவன் மகிழ்ச்சி ஆக பதிவிட்டதிலிருந்து பெரும் சர்ச்சைகள் வெடித்தது. அதாவது வாடகைத்தாய் சட்டத்தை மீறி தான் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் குழந்தை பெற்றுக் கொண்டதாக புகார்கள் எழுந்தது. இதன் காரணமாக தமிழக அரசு விசாரணை மேற்கொண்டது.
இந்த விசாரணையின் போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினர் தங்களுக்கு 6 வருடங்களுக்கு முன்பாகவே பதிவு திருமணம் நடந்ததற்கான சான்றிதழை அதிகாரிகளிடம் கொடுத்ததாகவும், கடந்த டிசம்பர் மாதமே வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு ஒப்பந்தம் செய்ததற்கான ஆவணத்தையும் சமர்ப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியை சுற்றிலும் பல்வேறு பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், அவர்கள் அதைப்பற்றி எல்லாம் கண்டுகொள்ளவே இல்லை.
அவர்கள் தங்களுடைய வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னுடைய வலைதள பக்கத்தில் தன்னுடைய மகன்கள் யூரின் போய்விட்டதாக கூறி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனுடன் Dream come true என்ற கேப்ஷனையும் வெளியிட்டுள்ளார். மேலும் ஒரு தந்தையாக நெகிழ்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.