தமிழ் சினிமாவில் தன்னுடைய கடின உழைப்பின் மூலம் படிப்படியாக வளர்ச்சி அடைந்து தற்போது இந்திய சினிமாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். நடிகர் விஜயின் படங்கள் என்றாலே பொதுவாக வசூல் வேட்டை நடத்துவதால் வசூல் சக்கரவர்த்தி என்று தளபதி அழைக்கப்படுகிறார். அதன்பிறகு விஜய் நடிப்பில் அண்மையில் பீஸ்ட் திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் ராஷ்மிகா ஹீரோயினாக நடிக்க, தமன் இசையமைக்கிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில், வாரிசு படத்தில் இருந்து ரஞ்சிதமே, தீ தளபதி, அம்மா சென்டிமென்ட் பாடல் போன்றவைகள் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் நடிகர் விஜயின் குட்டி ஸ்டோரி ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.
இந்நிலையில் நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சமீபத்திய பேட்டியில் தன்னுடைய மகனிடம் பிடித்த விஷயம் குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, எனக்கு விஜயிடம் பிடித்தது அவருடைய தமிழ் உச்சரிப்பு தான். அவர் தமிழை உச்சரிக்கும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த வகையில் அவர் சமீபத்தில் பாடிய ரஞ்சிதமே பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடலாகும் என்று கூறியுள்ளார். மேலும் ஷோபா நடிகர் விஜய் பற்றி சொன்னது தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.