Categories
உலக செய்திகள்

“எனக்கு இன்னும் சாவு வரல!”….. கொடூர விபத்தில் பிழைத்த மந்திரி….. வெளியான வீடியோ….!!

மடகாஸ்கரில் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டதில், செர்ஜ் கெல்லே என்ற மந்திரி சுமார் 12 மணி நேரங்களாக கடலில் நீந்தி உயிர் தப்பியிருக்கிறார்.

ஆப்பிரிக்காவின் கிழக்கு பகுதியில் இருக்கும் மடகாஸ்கர் என்ற தீவு நாட்டில் கடந்த திங்கட்கிழமை அன்று, ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டு, சுமார் 39 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த ஹெலிகாப்டரில் இருந்த இரண்டு நபர்கள் மட்டும் தான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அதில் ஒரு நபர் அந்நாட்டின் மந்திரியான, செர்ஜ் கெல்லே.

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, “நான்  சாகும் நேரம் வரவில்லை” என்று கூறியிருக்கிறார். இவர் சுமார் 12 மணி நேரங்களாக கடலில் நீந்தி உயிர் தப்பியிருக்கிறார். அவர் ஹெலிகாப்டரில் இருந்த ஒரு இருக்கையை வைத்து படகு போல் பயன்படுத்தி கடலில் நீந்தியிருக்கிறார். அவருடன், மற்றொரு நபரும் நீரில் நீந்தி கரை சேர்ந்துவிட்டார்.

Categories

Tech |