மியான்மர் நாட்டின் முன்னாள் தலைவரான ஆங் சான் சூகிக்கு ஊழல் போன்ற பல வழக்குகளின் கீழ் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் மேலும் 7 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
மியான்மரில் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் முதல் தேதி அன்று ராணுவம் ஆட்சியைப் பிடித்தது. அதன் பிறகு, நாட்டின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி உட்பட முக்கியமான தலைவர்களை வீட்டு சிறையில் அடைத்தனர். ராணுவத்தை எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபட்டது, ஊழல் போன்ற பல வழக்குகளின் கீழ் ஆங் சான் சூகிக்கு 26 வருடங்கள் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் மற்றொரு வழக்கு ஒன்றில் அவருக்கு மேலும் ஏழு வருடங்கள் சிறை தண்டனையை ராணுவ நீதிமன்றம் விதித்திருக்கிறது. இதன் மூலம், அவருக்கு மொத்தமாக 33 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.