ஆங் சான் சூகியின் வீட்டை ராணுவவீரர்கள் சோதனையிட்டதில், கடத்தல் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டதால் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம், முதல் தேதியன்று நாட்டின் ராணுவம், மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஆட்சியை கவிழ்த்து அதிகாரத்தை கைப்பற்றி விட்டது. அதன்பிறகு நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உட்பட முக்கிய தலைவர்களை சிறை வைத்தது. அன்றிலிருந்து, ஆங் சான் சூகி வீட்டு சிறையில் தான் வைக்கப்பட்டிருக்கிறார்.
அப்போது, தகவல் தொடர்பு சாதனங்களை சட்டவிரோதமாக வாங்கியதோடு, கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் தேசிய பேரிடர் வேளாண்மை சட்டத்தை மீறினார். எனவே, அவர் மீது பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடந்த டிசம்பர் மாதத்தில் அவருக்கு 4 வருடங்கள் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
இதனிடையே, அவரின் வீட்டில் ராணுவத்தினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு கடத்தல் கருவிகள் கண்டறியப்பட்டிருக்கிறது. எனவே, கடந்த டிசம்பர் மாதத்தில் அவருக்கு நான்கு வருடங்கள் தண்டனை விதிக்கப்பட்டதுடன் சேர்த்து, மேலும் நான்கு வருடங்கள் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது
.