Categories
உலக செய்திகள்

2020-ல் நடந்த பொதுத்தேர்தல்… தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு… வெளியான பரபரப்பு தகவல்..!!

மியான்மர் தேர்தல் ஆணையம் கடந்த 2020-ஆம் ஆண்டு நடந்த பொது தேர்தலின் முடிவுகளை ரத்து செய்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

மியான்மரில் கடந்த 2020-ஆம் ஆண்டில் நடந்த பொது தேர்தலில் The national league for democracy ( NLD) மகத்தான வெற்றியை பெற்றது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் அந்த பொது தேர்தலின் முடிவுகளை ரத்து செய்வது NLD-ஐ கலைக்க வழிவகுக்கும் என்று பிரபல டிவி தெரிவித்துள்ளது. மேலும் மியான்மர் ராணுவம் கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த பொதுத்தேர்தலில் NLD-யின் மோசடி தொடர்பாக விசாரணை மேற்கொண்டதோடு சுமார் 1.3 மில்லியன் வாக்கு NLD கட்சி மோசடி செய்துள்ளதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

இருப்பினும் NLD கட்சி இந்த குற்றச்சாட்டினை ஏற்க மறுப்பு தெரிவித்துவிட்டது. இதனால் மியான்மர் ராணுவம் அந்நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்ததோடு ஆட்சியை கவிழ்த்து அதிகாரத்தையும் தன் வசம் கொண்டு வந்தது. இந்த நடவடிக்கையை எதிர்த்து மியான்மரில் பல போராட்டங்கள் நடந்தது. அதில் பொதுமக்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |