ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருக்கும் போது அவர் தனது நண்பர்களுடன் வீடியோ கால் பேசி எடுத்து கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியத் திரைப்பட இயக்குநர், பின்னணிப் பாடகி மற்றும் நடனக்கலைஞர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஆவர். சமீபத்தில் இவரும் நடிகர் தனுஷும் விவாகரத்து செய்து கொள்வதாக தெரிவித்தனர்.
இதனை அடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காதல் பாடல் வீடியோவான முசாபிரை தயாரிக்க ஹைதராபாத்துக்கு சென்றிருக்கிறார். பிஸியாக வேலை பார்த்துக் கொண்டிருந்த அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையதளத்தில் பதிவிட்டு அத்துடன் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தனது இரண்டு நண்பர்களுடன் வீடியோ காலில் பேசியபோது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் பற்றி ஐஸ்வர்யா கூறியதாவது. “என்னுடன் எப்போதுமே பேசாத நண்பர்கள் கொரோனா பாதிப்பில் இருக்கும்போது கால் செய்து பேசியது #myforever” என தெரிவித்துள்ளார்.
https://www.instagram.com/p/CaAdHdpvuz-/?utm_source=ig_web_copy_link
ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இணையதள பதிவை பார்த்த தனுஷ் ரசிகர்கள் கூறியதாவது. “இந்த புகைப்படத்தில் சந்தோஷமாக இருக்கிறீர்கள் அண்ணி ஆனால் #myforever பார்த்தால் தான் பயமாக இருக்கிறது. தனுஷ் அண்ணனுடன் சேரும் ஐடியா இல்லையா?.. யார் இந்த இரண்டு பேர்?… தனுஷ் அண்ணா பாவம்” என தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து முசாபிர் பாடலின் வீடியோ ட்ரெய்லரில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்று மட்டும்தான் பேர் இருந்தது. தனுஷ் பெயர் இல்லை அதனால் அவர்களின் விவாகரத்து உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள்.