மைசூர் ரசம்
தேவையான பொருட்கள் :
வேக வைத்த துவரம்பருப்பு – 1/2 கப்
தக்காளி – 6
வெல்லம் – சிறிய துண்டு
கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
தனியா – 2 டீஸ்பூன்
தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன்
கடுகு – ஒரு டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
நெய் – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் கடாயில் நெய் ஊற்றி , கடலைப்பருப்பு, தனியா, மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும் . மிக்ஸியில் தண்ணீர் விட்டு, வறுத்த பொருட்கள் , தேங்காய் துருவல் , சீரகம் சேர்த்து விழுதாக அரைக்க வேண்டும். தக்காளியை தண்ணீர் சேர்த்து தனியே மிக்ஸியில் அரைக்க வேண்டும். தக்காளி சாறு, வேகவைத்த துவரம்பருப்பு மற்றும் பருப்பு வேகவைத்த தண்ணீர் , அரைத்த விழுது , உப்பு போட்டு 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி நெய்யில் கடுகு தாளித்து வெல்லம், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கினால் சுவையான மைசூர் ரசம் தயார் !!!